www.sankamam.com | info@sanakamam.com
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
11 | அறத்துப்பால் > பாயிரம் > வான் சிறப்பு
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
09-09-2010
Share |
முக்கிய செய்திகள் :
அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அரசாங்கம் இராணுவப் புரட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது: பொன்சேகா > அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கம் மக்கள் புரட்சிகளுக்கும் இராணுவப் புரட்சிக்கும் அழைப்பு விடுக்கின்றது என்று ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்  பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: நாட்டின் அரசியலமைப்பானது மக்களையும் எதிர்க்கட்சியினரையும் மிதிப்பதாக இருக்குமானால் அதன் விளைவுகள் என்ன என்பதை உலகத்தில் நாங்கள் பார்த்துள்ளோம். அதாவது தற்போதைய நிலைமையில் அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கம் மக்கள் புரட்சிகளுக்கும் இராணுவப் புரட்சிக்கும் அழைப்பு விடுக்கின்றது. தற்போதைய அரசியலமைப்பு தொடர்ந்திருக்குமானால் சில வருடங்களில் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்திருக்கலாம். ஒரு காலத்தில் நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதியாக வந்திருக்கலாம். ஆனால் 18 ஆவது திருத்தத்தின் மூலம் அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது. ஒருவரே தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகிப்பதன் மூலம் பல சிக்கல்கள் எழலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயக தேசிய கூட்டணியினர் என்ற வகையில் இன்றைய தினத்தை கவலைமிக்க தினமாகவே பார்க்கின்றோம். மக்களின் இறைமை மற்றும் ஜனநாயகம் என்பன இறந்துபோன தினமாகும். அரசியலமைப்பானது அமைச்சர்களை பலப்படுத்துவதாக இல்லாமல் மக்களை பலப்படுத்துவதாக அமைய வேண்டும். தற்போதைய நிலைமையிலேயே இவர்களுக்கு போதுமான அதிகாரங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்துக்கொண்டு எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அதனைவிடுத்து இருக்கின்ற அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். இந்நிலையில் எமது ஜனநாயக தேசிய கூட்டணியானது இந்த 18 ஆவது திருத்தங்களை கடுமையாக எதிர்க்கின்றது. நாங்கள் அதற்கு எதிராகவே வாக்களிக்கின்றோம். எமது கட்சியில் உள்ள ஏழு பேரும் இதற்கு எதிராக செயற்படுவோம். இன்...
பிரபாகரனுக்கே நாம் பயப்படவில்லை! உனக்கு பயப்படப் போகிறோமா!: சுமந்திரனின் உரைக்கு ஆளும் கட்சியினர் கூச்சல். > நாட்டு மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறியாது உரிமைகள் பறிக்கப்பட்டதும் அதேவேளை ஜனநாயகத்துக்கு ஆணி அறையப்பட்டதுமான 18ஆவது திருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் நாட்டைக் காட்டிக் கொடுக்காத பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சார்ந்துள்ளது என்று அக்கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.யான எம். சுமந்திரன் நேற்று சபையில் தெரிவித்தார் ...
சரணடைய வந்த புலிகள் கொல்லப்படவில்லை: ஆணைக்குழு முன் இராணுவ அதிகாரி கமால் குணரட்ண சாட்சியம்.. > யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அரசாங்க படையினரிடம் சரணடையவந்த எந்தவொரு விடுதலைப் புலி உறுப்பினரும் கொல்லப்படவில்லை. முழுமையான பரிசோதனையின் பின்னர் அவர்கள் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். சரணடைந்தவர்களை பெறுமதியான தகவல் மூலங்களாகவே நாங்கள் பார்த்தோம் என்று மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்தார் ...
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை > உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்... ...
  • இலங்கை (ஈழம்)

  • இந்தியா

  • உலகம்

  • விளையாட்டு

  • தொழிநுட்பம்

  • சினிமா

  • புலம்

வியாழக்கிழமை, 09 செப்டம்பர் 2010 05:56
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கம் மக்கள் புரட்சிகளுக்கும் இராணுவப் புரட்சிக்கும் அழைப்பு விடுக்கின்றது என்று ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார் 

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:

நாட்டின் அரசியலமைப்பானது மக்களையும் எதிர்க்கட்சியினரையும் மிதிப்பதாக இருக்குமானால் அதன் விளைவுகள் என்ன என்பதை உலகத்தில் நாங்கள் பார்த்துள்ளோம். அதாவது தற்போதைய நிலைமையில் அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கம் மக்கள் புரட்சிகளுக்கும் இராணுவப் புரட்சிக்கும் அழைப்பு விடுக்கின்றது.

தற்போதைய அரசியலமைப்பு தொடர்ந்திருக்குமானால் சில வருடங்களில் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்திருக்கலாம். ஒரு காலத்தில் நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதியாக வந்திருக்கலாம். ஆனால் 18 ஆவது திருத்தத்தின் மூலம் அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது. ஒருவரே தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகிப்பதன் மூலம் பல சிக்கல்கள் எழலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயக தேசிய கூட்டணியினர் என்ற வகையில் இன்றைய தினத்தை கவலைமிக்க தினமாகவே பார்க்கின்றோம். மக்களின் இறைமை மற்றும் ஜனநாயகம் என்பன இறந்துபோன தினமாகும். அரசியலமைப்பானது அமைச்சர்களை பலப்படுத்துவதாக இல்லாமல் மக்களை பலப்படுத்துவதாக அமைய வேண்டும். தற்போதைய நிலைமையிலேயே இவர்களுக்கு போதுமான அதிகாரங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்துக்கொண்டு எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அதனைவிடுத்து இருக்கின்ற அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில் எமது ஜனநாயக தேசிய கூட்டணியானது இந்த 18 ஆவது திருத்தங்களை கடுமையாக எதிர்க்கின்றது. நாங்கள் அதற்கு எதிராகவே வாக்களிக்கின்றோம். எமது கட்சியில் உள்ள ஏழு பேரும் இதற்கு எதிராக செயற்படுவோம். இன்று எதிர்த்தரப்பில் இருக்கின்ற கட்சிகள் பலமாக இருப்பதாக தெரியவில்லை. சிலர் தனிப்பட்ட நலன்களுக்காக அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். அவர்கள் மக்களுக்கு சேவையாற்றுவார்களா என்பதில் சந்தேகமே நிலவுகின்றது.

நாங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவோம் என்று தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கினோம். அதில் தொடர்ந்து இருக்கின்றோம். எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எனினும் அதனை சார்ந்த வாக்குறுதியை அரசாங்கம் வழங்கியிருந்தது. ஆனால் குறுகிய காலத்தில் அதற்கு மாற்று வகையில் செயற்படுகின்றனர்.

அதாவது தற்போதைய நிலைமையில் சர்வாதிகாரத்துக்கு தேவையான விடயங்களை நோக்கி நகர்வதாகவே நாங்கள் உணர்கின்றோம். இது தொடர்பில் உலகில் நாங்கள் பல உதாரணங்களை பார்த்துள்ளோம். தற்காலிகமாக கிடைக்கின்ற அதிகாரங்களை நீடிக்க முயற்சித்து அதில் குறுகிய காலத்தில் தோல்வியடைந்த வரலாறுகள் உலகில் உள்ளன. எனவே இந்த நீடிப்பு யற்சியானது நீண்டகாலத் துக்கு நீடிக்குமா? என்பது கேள்விக்குறியாகும்.

இன்றைய நிலைமையில் பாராளுமன்றத்துக்கு வருகின்ற மார்க்கங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் ஒரு கையில் ஜனாதிபதியின் படத்தை வைத்துக்கொண்டு மறு கையினால் எனக்கு சைகை செய்கின்றனர். அவர்களின் கங்களில் கவலைகள் தெரிந்தன.

பாராளுமன்றத்தில் நாங்கள் இந்த திருத்தத்தை எதிர்க்கின்ற அதேநேரம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த அரசாங்கத்துக்கு சரியான மக்கள் வரம் கிடைக்கவில்லை. ஒரு கோடியே 40 இலட்சம் வாக்காளர்களில் 47 இலட்சம் மக்களே அரசாங்கத்துக்கு தேர்தலில் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அந்த வகையில் மூன்றில் ஒரு பகுதி மக்களே அரசாங்கத்துக்கு கடந்த தேர்தலில் வாக்களித்தனர்.

கேள்வி: உங்கள் கூட்டணியில் ஏழு உறுப்பினர்களே இருக்கின்றனர். ஆர்ப்பாட்டங்களை தவிர என்ன செய்வீர்கள்?

பதில்: எமது ஜனநாயக தேசிய கூட்டணியில் ஏழு உறுப்பினர்கள் தான் இருந்தாலும் எதிர்க்கட்சி வரிசையில் மிகவும் பலமான முறையில் செயற்படுகின்றோம். மிகப் பெரிய எதிர்க்கட்சியைவிட சிறப்பாக குரல் எழுப்பி வருகின்றோம். அதனால்தான் மக்கள் எம்மில் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே எமது பலத்தை குறைத்து மதிப்பிடவேண்டாம்.

கேள்வி: ஐக்கிய தேசிய கட்சி இன்று (நேற்று ) பாராளுமன்றத்தில் இருந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றீர்களா?

பதில்: எனது கருத்தின்படி பாராளுமன்றத்துக்கு சமுகம் அளித்து இந்த திருத்தத்தை எதிர்த்து பேசியிருக்கவேண்டும். ஆனால் அவர்கள் வரவில்லை. அதனால் அரசாங்கத்துக்கு இலகுவாகிவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியானது 23 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்றுள்ளது. எனவே மக்களின் சார்பாக இங்கே வந்து அவர்கள் உரையாற்றியிருக்கவேண்டும்.

கேள்வி: குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்?

பதில்: இதற்கு முன்னர் எதிர்க்கட்சியில் குறைந்த எம்.பி. க்கள் இருந்த வரலாறு உள்ளது. எதிர்க்கட்சி பலவீனமாக இருந்தாலும் அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களில் மாற்றம் இல்லை. அதாவது வாக்காளர்களில் மூன்றிலிரண்டு பகுதியினர் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. எனவே எம்மால் எதிர்த்து செயற்பட முடியும். உடனடியாக முடியாவிட்டாலும் எம்மால் பலமாக நீண்டகாலத்தில் செயற்பட முடியும். மக்கள் எம்டன் இருக்கும் வரை எங்களை ஒன்றும் செய்ய முடியாது.

எனினும் அரசியலமைப்பின் ஊடாக மக்களையும் எதிர்க்கட்சியினரையும் மிதிக்க முயற்சித்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதற்கான உதாரணங்களை உலகில் நாங்கள் பார்த்துள்ளோம். மக்கள் புரட்சிகளுக்கும் இராணுவ புரட்சிகளுக்கும் வழி வகுக்கலாம். ஆனால் அவ்வாறு நடைபெற வேண்டாம் என்று பிரார்த்திக்கின்றோம்.

கேள்வி: ஜனநாயக தேசிய கூட்டணி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுமா?

பதில்: அவர்கள் இணைந்து செயற்பட முன்வந்தால் பார்க்கலாம். முதலில் அவர்களின் கட்சி உட்பூசலை தீர்த்துக்கொள்ள வேண்டும். நாட்டுப் பிரச்சினைகளைவிட ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சினைகள் அதிகமாகும். எனவே அவற்றை தீர்த்துக்கொண்டு வந்தால் பார்க்கலாம்.

கேள்வி: இராணுவ நீதிமன்ற நிலைமைகள் எவ்வாறு உள்ளன?

பதில்: அதனை இராணுவ நீதிமன்றம் என்று கூற நான் விரும்பவில்லை. அது காட்டு நீதிமன்றமாகும். காட்டு நீதிமன்றத்தில் விதிக்கப்படும் தண்டனைகள் குறித்து தெரியும் தானே? அடுத்த கட்டத்தில் நான் சிறையிலடைக்கப்படலாம். எந்த சட்டத்தரணி எவ்வாறு வாதாடினாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை.

காரணம் தீர்ப்பு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. மேன்றையீடு செய்தாலும் ஒன்றும் நடக்காது. அங்கு நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. நான்கு மேஜர் ஜெனரல் தரத்தில் உள்ளவர்கள் நான்கு நட்சத்திர ஜெனரல் ஒருவரின் பதவிகளை பறிப்பது உலகில் எங்கும் நடந்திருக்காது.நான் மன்னிப்பு கேட்டால் எனக்கு ஒன்றும் நடக்காது என்று பலரிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்தளவுக்கு கீழ்த்தரமாக நடந்துகொள்ள மாட்டேன். 

மேலும் படிக்க...
வியாழக்கிழமை, 09 செப்டம்பர் 2010 05:04
நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் பிரதியமைச்சர் பதவி. நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவுக்கு   மீண்டும் பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவி தமக்கு மீண்டும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்
மேலும் படிக்க...
வியாழக்கிழமை, 09 செப்டம்பர் 2010 05:44
புத்திர பாசத்திற்காக இந்த அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது : அனுரகுமார திஸாநாயக்க புத்திர பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
வியாழக்கிழமை, 09 செப்டம்பர் 2010 05:33
நாட்டு மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறியாது உரிமைகள் பறிக்கப்பட்டதும் அதேவேளை ஜனநாயகத்துக்கு ஆணி அறையப்பட்டதுமான 18ஆவது திருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் நாட்டைக் காட்டிக் கொடுக்காத பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சார்ந்துள்ளது என்று அக்கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.யான எம். சுமந்திரன் நேற்று சபையில் தெரிவித்தார்
மேலும் படிக்க...
வியாழக்கிழமை, 09 செப்டம்பர் 2010 05:26
ஆளும் கட்சிக்கு ஆதரவளித்த ஐ.தே.க உறுப்பினர்கள் பதவிகளிலிருந்து நீக்கம். ஆளும் கட்சிக்கு ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் வகித்து வந்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க...
வியாழக்கிழமை, 09 செப்டம்பர் 2010 05:19
சரணடைய வந்த புலிகள் கொல்லப்படவில்லை: ஆணைக்குழு முன் இராணுவ அதிகாரி கமால் குணரட்ண சாட்சியம்..

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அரசாங்க படையினரிடம் சரணடையவந்த எந்தவொரு விடுதலைப் புலி உறுப்பினரும் கொல்லப்படவில்லை. முழுமையான பரிசோதனையின் பின்னர் அவர்கள் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். சரணடைந்தவர்களை பெறுமதியான தகவல் மூலங்களாகவே நாங்கள் பார்த்தோம் என்று மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்தார்

மேலும் படிக்க...
வியாழக்கிழமை, 09 செப்டம்பர் 2010 05:12
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்...
மேலும் படிக்க...
புதன்கிழமை, 08 செப்டம்பர் 2010 14:24
த.தே.கூட்டமைப்பு அம்பாறை எம்.பி. பியசேன அரசுக்கு ஆதரவு: சபையில் தெரிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் பியசேன 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
புதன்கிழமை, 08 செப்டம்பர் 2010 14:12
பாராளுமன்றத்தில் அரசு இன்று 3/2 பெரும்பான்மை பெற்றள்ளது.

18ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் 144 மேலதிக வாக்குகளால்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது

மேலும் படிக்க...
புதன்கிழமை, 08 செப்டம்பர் 2010 13:49
ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவும் அரசாங்கத்திற்கு ஆதரவு 18 வது அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
More:
புதன்கிழமை, 08 செப்டம்பர் 2010 15:44
வேலூரில் இருந்து கடலூருக்கு இன்று காலை அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அதில் 40 பயணிகள் இருந்தனர். காலை 5.45 மணிக்கு மல்லவாடி அருகே திடீர் குப்பம் கிராமத்தில் வந்து கொண்டு இருந்தது.
மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
நடுரோட்டில் என் புடவையை கிழித்தனர் - விஜயசாந்தி ஆந்திராவில் 12 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி பல்வேறு கட்சியினர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணையும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது.
மேலும் படிக்க...
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 21:57
அமெரிக்க டிஸ்கவரி டி.வி. அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் ஊழியர்கள் சிறைபிடிப்பு

டிஸ்கவரி டி.வி. தலைமை அலுவலகம் அமெரிக்காவின் தலைநகரம் வாஷிங்டனில் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியுடன் புகுந்தான். பிரதான வாசல் வழியாக உள்ளே நுழைந்த அவன் துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டினான்.

மேலும் படிக்க...
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 21:08
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். 

மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
பாலஸ்தீனத்தில் மனிதாபிமான உதவிகளை செய்வதற்காக கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல் பாலஸ்தீனத்தின் காசா முனைப்பகுதியில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற மைரீட் கோரிகன் மேகுர் உள்பட 700 பேர் 6 கப்பல்களில் வந்து கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
“நோபால்” விவகாரத்துக்கு நான் பொறுப்பேற்கிறேன்; கேப்டன் சங்ககரா பேட்டி
“நோபால்” பிரச்சினை தொடர்பாக இலங்கை கேப்டன் சங்ககரா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
புற்றுநோய், மாரடைப்பை பாம்பு விஷம் குணப்படுத்தும் பாம்பு என்றால் படையும் நடுங்கும். ஆனால் அந்த பாம்பில் இருந்து எடுக்கப்படும் விஷம் பலதரப்பட்ட பெரிய நோய்களை குணப்படுத்தக்கூடியது என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
நான் மகா நடிகன் கிடையாது - சூர்யா நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். என் வாழ்க்கையில் இதுதான் அருமையான நேரம்னு நினைக்கிறேன்!" . அழகான கண்கள் கபடி ஆட, மென் புன்னகையில் மிளிர்கிறார் சூர்யா. ரஜினி, கமலுக்கு அடுத்தபடியான தமிழ் சினிமாவின் வியாபாரம் இன்று... சூர்யாவுக்குத்தான்!
மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்: சுவீடன்,யேர்மன் தேர்தல் ஆணையங்கள் அறிவிப்பு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கு சுவீடனில் 01 பிரதிநிதியும், யேர்மனியில் 10 பிரதிநிதிகளும் தேர்வு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி நடைபெறுகிறது.
மேலும் படிக்க...

கவிதை

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 13:18
கடலம்மா...! கடலம்மா... நீயே சொல்
'குமுதினி' ஏன் பிந்தி வந்தாள்?
மேலும் படிக்க...
More:

சிறுகதை

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 13:47
ஆரம்பிக்கப்படாத வாழ்வு சூரியன் தன் உடல் கிழித்து வெப்பத்தைச் சிந்திக்கொண்டிருந்தான். அவள் கூரையின் ஓட்டை வழி வந்த வெளிச்சத்தை தன் முகத்தில் ஏந்திக்கொண்டிருந்தாள். துர்நாற்றமும் புழுக்களும் ஈக்களுமாய் தன்னைச் சுற்றுவதைத் தவிர்க்க ஏதோ ஒரு வாசனைத் திரவியத்தைத் தெளித்துவிட்டு மீண்டும் யன்னல் வழி தன் பார்வையைச் சுழலவிட்டாள். வியர்வையில்கூட துர்நாற்றம் உரசிப்போகிறது.
மேலும் படிக்க...
More:

கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010 16:24

மகஸின் சிறைச்சாலையில் சந்தேகத்தின் பெயரில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், தங்களை விடுதலை செய்யுமாறு கோரி கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் படிக்க...
More:

வெளிச்சம்

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 15:14
மனிதாபிமானம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் மூத்தோர் அமைப்பின் அறிக்கை சிறிலங்காவில் சமூக முன்னேற்றம் உடனடியாகத் தேவைப்படுகின்றது என்று ‘தி எல்டர்ஸ்’ என்ற மூத்தோர் அமைப்பு ஆகஸ்ட் 3, 2010 அன்று அறிக்கைவாயிலாக தெரிவித்துள்ளதுடன் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரினால் நியமிக்கப்பட்டிருக்கும் மூவர் அடங்கிய ஆலோசனைக் குழுவுக்கு சிறிலங்கா முழு ஆதரவை அளிக்கவேண்டும் என்றும் இந்த அமைப்பு கேட்டுள்ளது.
மேலும் படிக்க...
More:

சிறப்புப் பார்வை

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 15:19
ஈழத் தமிழர்கள் ஏன் ஒடுகிறார்கள்? யுத்தம் என்பது வெறும் சொல் மாத்திரமல்ல அது மனிதப் பேரழிவின் தொடர் நிகழ்ச்சியாகும் போர் என்பது மனிதர்களை வாழ்விடங்களில் இருந்து பிடுங்கி வீசும் கொடிய சுழல் காற்று சொந்த பந்தங்களைக் காவு கொள்ளும் சூறாவழி யுத்தம் நின்றாலும் அதன் அவலங்களும் அலைச்சலும் மீளாத் துயரமும் தலைமுறைகளாகத் துரத்திக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் அதன் வேதனையை முற்றாக உணர்ந்தவர்கள்
மேலும் படிக்க...
More:

அறி! தெளி! துணி!

திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 11:59
 காந்தி - பிரபா - இந்தியா - ஈழம் அறி

மோகன்தாஸ் காந்தி 02.10.1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் (1882) தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். .
மேலும் படிக்க...

சிறப்புக் கட்டுரைகள்

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 15:25
எமக்கான இன்றைய வாய்ப்பு இதுதான் ஈழத் தமிழர் வாழ்வில் நடந்தது எதுவோ அதனை எண்ணி தொடர்ந்தும் மனதைக் குழப்பாது அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இன்று இருக்கிறோம்.
மேலும் படிக்க...
More:

நில்! கவனி! முன்னேறு!

திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 12:13
அப்பே ரட்ட ஆக்கிறேன் பாருங்கோ எயார் லங்காவில ரிக்கற் போட்டு எல்லாரும் வாருங்கோ சர்வதேச ரீதியாக இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பற்றிய விடயங்கள் ஒரு புறம் கசிய விடப்படுகிறது அல்லது வெளிவருகிறது. ஒரு சில மனித நேய அமைப்புகள் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றன. அது தவிர சில நாடுகள் “நான் அடிக்கிற மாதிரி நடிக்கிறன் நீ அழுகிற மாதிரி நடி’ என்னும் பாணியில் நாடகம் போட்டுக்கொண்டிருக்கின்றன.
மேலும் படிக்க...

சாளரம்

திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 12:50
செப்டம்பர் 19, 1965 இல் பிறந்த சுனிதா வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்.
மேலும் படிக்க...

தாயக தரிசனம்

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 15:29
தாயக தரிசனம் ஊரின்  பெயர் - அளவெட்டி
மாவட்டம் - யாழ்ப்பாணம்
அமைவிடம் - வழக்கை ஆறு, அல்லது வழுக்கை ஆறு   எனப்படும்ஆற்றின் வெள்ள வடிகால் பகுதியில் அமைந்துள்ளது.
மேலும் படிக்க...

தூய தமிழ்

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 15:32
தூய தமிழ் சொற்கள் உக்கிரம் -  கடுமை
உச்சரிப்பு - ஒலிப்பு
உத்தரம்  - வடக்கு
உத்தரவாதம்  - உறுதி,பொறுப்புறுதி

More:

மரண அறிவித்தல்

திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 13:28
திருமதி செல்லத்துரை நவரட்ணம்
திருமதி செல்லத்துரை நவரட்ணம்
பிறந்த இடம் : வல்வெட்டி
வாழ்ந்த இடம் : வல்வெட்டி
தகவல் : மதன் அன்னலிங்கம்
மேலும் படிக்க...
திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 13:28
திருமதி திருப்பதி பூபாலசிங்கம்
திருமதி திருப்பதி பூபாலசிங்கம்
பிறந்த இடம் : ஊரெழு
வாழ்ந்த இடம் : இந்தியா
தகவல் : கஜேந்திரன்
 
மேலும் படிக்க...

தமிழன் குரல் - உள்ளிருந்து

ஞாயிற்றுக்கிழமை, 29 ஆகஸ்ட் 2010 20:46
தமிழீழ நிலத்தை சிங்கள ஆயுதபடைக்கு வழங்குவதா? அவசரகால நீடிப்பு சம்பந்தமான பல பேச்சுக்களை இன்று மதியத்திற்குப் பிறகு கேட்டிருக்கிறோம். நாம் கடந்த சில மாதங்களாகவும் ஒவ்வொரு மாதமாகவும் விவாதித்து இருக்கிறோம். சபையின் ஒரு பக்கத்தினர் அதாவது ஆளும் தரப்பினர் அவசரகால நிலமையை ஆதரித்தும் எதிர்க்கட்சி எதிர்த்தும் பேசியிருக்கிறார்கள்.
மேலும் படிக்க...
More:

தமிழன் குரல் - வெளியிலிருந்து

ஞாயிற்றுக்கிழமை, 29 ஆகஸ்ட் 2010 20:33
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கடமை ஈழத்தமிழ்மக்களின் அரசியல் நிலை மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒருமுனையில், தமிழ்த்தேசியத்தைப்  பற்றுறுதியுடன் வரிந்துகொண்டுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்மக்களின் அரசியல் இருப்பை தக்கவைக்க முயற்சிக்கின்றது.
மேலும் படிக்க...
More:

தமிழன் குரல் - தமிழகத்திலிருந்து

ஞாயிற்றுக்கிழமை, 29 ஆகஸ்ட் 2010 21:03
இனப்பற்று இழிவானதா? இதே தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் நாட்டுப்பற்றை விட உயர்வான ஒன்றாகப் போற்றப்பட்டது ‘இனப்பற்று’! ஆனால் இன்று இனப்பற்று என்னும் சொல்லையே யாரும் பயன்படுத்துவதில்லை; ‘இன உணர்வு’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
மேலும் படிக்க...
More:

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஆகஸ்ட் 2010 17:25
தமிழீழத் தேசிய மரம் - வாகை தமிழீழத்தின் தேசிய மரம். தமிழர் தாயகத்தின் மரபுரிமைச் சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத் தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்க காலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது.
மேலும் படிக்க...
More:

மறுக்கமுடியாத மாவீரம்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஆகஸ்ட் 2010 19:02
லெப். செல்லக்கிளி - அம்மான் சதாசிவம் செல்வநாயகம்
கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான
கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.
மேலும் படிக்க...
More:

ஒளிப்பதிவுகள்

படம் சொல்லும் செய்தி

புதன்கிழமை, 08 செப்டம்பர் 2010 05:39
வேலுப்பிள்ளை பிரபாகரன்
வேலுப்பிள்ளை பிரபாகரன்

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளமைக்காலத் தோற்றம்

மேலும் படிக்க...

Who's Online

இணைப்பில் உள்ளவர்கள்: 6 விருந்தினர்கள்